| பைக் மீது பஸ் மோதல்: கண்ணாடி உடைப்பு Dinamalar
பைக் மீது பஸ் மோதல்: கண்ணாடி உடைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2019
02:15

போத்தனுார்:சுந்தராபுரம் நான்கு ரோடு சந்திப்பில், நேற்று காலை வாலிபர் ஒருவர் சிக்னலுக்காக தனது பைக்கை நிறுத்தியிருந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் டவுன் பஸ் (தடம் எண்: 84 ஏ), பைக் மீது மோதியது. கீழே விழுந்த வாலிபர், ரோட்டின் வலதுபுறமாக உருண்டு, உயிர் பிழைத்தார்.அங்கிருந்த போக்குவரத்து போலீசார், பஸ்சை சங்கம் வீதியில் நிறுத்தச் செய்தனர். அப்போது ரோட்டில் விழுந்த வாலிபர் செங்கல்லை வீசி, பஸ்சின் முன் கண்ணாடியை உடைத்தார். தகவலறிந்து அங்கு வந்த போத்தனுார் போலீசார் விசாரணையில், தனியார் நிறுவன ஊழியரான தடாகத்தை சேர்ந்த விக்னேஷ் என தெரிந்தது.விசாரணை நடக்கிறது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X