ரூ.85 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2019
02:34

அண்ணா நகர்: அண்ணா நகரில், 85 கோடி ரூபாய் மதிப்பிலான, 31 ஆயிரம் சதுர அடி ஆக்கிரமிப்பு நிலத்தை, மாநகராட்சியினர் நேற்று மீட்டனர்.சென்னை அண்ணா நகரில், 'டவர் கிளப்' உள்ளது. மாநகராட்சியின் இடம், 31 ஆயிரத்து, 255 சதுர அடி, டவர் கிளப் வசம் உள்ளதால், கட்டடத்தில் இருந்து வெளியேறும்படி, மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அண்ணா நகர் டவர் கிளப் நிர்வாகம், மனு தாக்கல் செய்தது.மனுவை விசாரித்த, நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு :ஆக்கிரமிப்பு மற்றும் அனுமதியின்றி கட்டுமானம் செய்திருப்பதை, டவர் கிளப் ஒப்புக்கொண்டுள்ளது.விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட, 55 ஆயிரம் சதுர அடியில், 31 ஆயிரம் சதுர அடி திறந்த வெளி நிலத்தை, கிளப் ஆக்கிரமித்துள்ளது. அனுமதியின்றி, அதில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை அகற்றப்பட வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து, ஆக்கிரமிப்பில் இருந்த, 85 கோடி ரூபாய் மதிப்பிலான, 31 ஆயிரம் சதுர அடி நிலத்தை, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள், நேற்று மாலை, மீட்டனர். மேலும், ஆக்கிரமிப்பு கட்டடத்திற்கு, 'சீல்' வைத்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X