போடி: போடி நகராட்சி பகுதியில் 'டெங்கு' தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கமிஷனர் சத்யநாதன், தேனி சப்-கலெக்டர் நிறைமதி (பயிற்சி) தலைமையில் நடந்தது. போடி நகர் மற்றும் பஸ்ஸ்டாண்ட் பகுதிகளில் 'டெங்கு' கொசு ஒழிப்பு, சாக்கடைகள் சுத்தம் செய்தல், குப்பை அள்ளுவது, தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுவது குறித்து குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் பயன்படுத்தப்படுவதை தடை செய்யும் வகையில் சோதனை நடந்தது. ' டெங்கு' கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை, வர்த்தக நிறுவனங்களுக்கு அபராதம்விதிப்பதோடு, உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் தெரிவித்தார். உதவி பொறியாளர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், சேகர், கோபாலகிருஷ்ணன் உட்பட அலுவலர்கள பங்கேற்றனர்.