வருஷநாடு : வருஷநாடு ஊராட்சிக்கு உட்பட்ட வருஷநாடு, வைகை நகர், தர்மராஜபுரம், பவளநகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகள் மற்றும் ஓட்டல்களில் ஏ.பி.டி.ஓ., கருப்பசாமி , ஊராட்சி செயலாளர் முருகேசன் தலைமையில் ஆய்வு செய்தனர். அதில் மாணிக்கம் என்பவர் கடையில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அவருக்கு ரூ. 5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.