திருப்புத்துார் : கண்ணதாசனின் சொந்த கிராமமான சிறுகூடல்பட்டியில் அவரது 38 வது நினைவு நாளை முன்னிட்டு கண்ணதாசன் இலக்கியப் பேரவை சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
சிறுகூடல்பட்டி கண்ணதாசன் பிறந்த கிராமம். அங்கு அவரது குடும்பத்தினரால் கண்ணதாசன் நினைவு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அவரது நினைவுநாளை முன்னிட்டு பலரும் அஞ்சலி செலுத்தினர். கண்ணதாசன் இலக்கியப் பேரவை சார்பில் கவிஞரின் இஷ்ட தெய்வமான மலையரசி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
அவரது சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர். வாழ்த்தரங்கம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ.,சுப்புராம் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். சுப்பிரமணியன் வரவேற்றார். பொருளாளர் குணாளன், வக்கீல் கணேசன், நிர்வாகிகள் பன்னீர் செல்வம், மருதுபாண்டியன்,சிங்காரம், ராமசாமி,சீனிவாசன், மகாலிங்கம் பங்கேற்றனர். மோகன் நன்றி கூறினார்.