ராமநாதபுரம் : பிரதமரின் துாய்மை இந்தியா திட்டம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு பணியாக ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய துவக்க்பள்ளி வளாகத்தில் துய்மை பணி மற்றும் டெங்கு விழிப்புணர்வு பணிகள் நடந்தது.
இவ்வளாகத்தில் மண்டபம் மாவட்ட கல்வி அலுவலகம், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர்
அலுவலகங்கள் செயல்படுகிறது.இங்கு நடந்த துப்புரவு பணிக்கு அரசு தேர்வுத்துறை உதவி இயக்குனர் கல்பனாத்ராய் தலைமை வகித்தார். மண்டபம் கல்வி மாவட்ட அலுவலர் பாலதண்டாயுதபாணி முன்னிலை வகித்தார். ஓம் சக்தி நகர் ஆரம்பப்பள்ளி மாணவர்கள், பெற்றோர், சுகாதாரப்பணியாளர்கள் கலந்துகொண்டு வளாகத்தை சுத்தப்படுத்தினர். கொசுக்களை உற்பத்தியாக்கும் குப்பையை அகற்றினர். பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட் ஜெயராஜ் நன்றி கூறினார்.