| சாலை மறியல் போராட்டம் Dinamalar
சாலை மறியல் போராட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2019
05:04

விருதுநகர் : விருதுநகரில் ரோடு வசதி கேட்டு கிராம மக்கள் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.

விருதுநகர் ஒன்றியம் ரோசல்பட்டி ஊராட்சியை சேர்ந்த தங்கமணி காலனி கிராமத்தில் 100 குடும்பங்கள் வசிக்கின்றது. இங்கு நீண்ட நாட்களாக ரோடு போடவில்லை. அப்பகுதியினர் ஊராட்சி செயலாளரிடம் பலமுறை கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். தற்போது மழைக்காலம் என்பதால், அப்பகுதி மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. நடக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் விரக்தி அடைந்த மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். ஊரக இன்ஸ்பெக்டர் செந்தாமரை நேரில் வந்து பொதுமக்களை சமாதானபடுத்தினார். அதன்பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X