பல்லாங்குழி ரோடு; காட்சிப்பொருளான கழிப்பறை; விரக்தியில் வி.வி.ஆர்., காலனி மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2019
05:04

அருப்புக்கோட்டை : முறையான குடிநீர் சப்ளை இல்லை, கரடுமுரடான சாலை, வாறுகால் வசதியில்லாததால் அடைபட்டு நிற்கும் கழிவுநீர், காட்சிப்பொருளான கழிப்பறைகள் என பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் அருப்புக்கோட்டை வி.வி.ஆர்., காலனி மக்கள்.

அருப்புக்கோட்டை நகராட்சி 8 வது வார்டு வி.வி.ஆர்., காலனியில்

5க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. தெருக்களில் ரோடு வசதி இல்லாமல் குண்டும், குழியுமாக, கற்கள் பெயர்ந்து நடக்க முடியாத அளவிற்கு உள்ளது. பள்ளி மாணவர்கள் சிரமப்பட்டு தான் செல்ல வேண்டிய உள்ளது. தெருக்களில் அமைக்கப்பட்ட வாறுகால்கள் தரமில்லாமல் உள்ளது.

அனைத்தும் பெயர்ந்தும் கழிவுநீர் வெளியேற முடியாமல் உள்ளது. குப்பை தொட்டிகள் இல்லை.

குப்பையை அள்ள வருவதும் இல்லை.

நகராட்சி குடிநீர் இணைப்பு காலனியில் இல்லாததால், வாரத்திற்கு 1 முறை நகராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

தற்போது லாரி பழுது என காரணம் காட்டி கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் இப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். குடிநீரை அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர்.

புழகத்திற்கும் தண்ணீர் இல்லை. நகராட்சி அமைக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் கழிப்பறைகள் பல லட்சம் செலவில் கட்டப்பட்டு காட்சிப்பொருளாக உள்ளது. தண்ணீர் வசதி இல்லாததால் கழிப்பறை பயன்பாடு இல்லாமல் உள்ளது. அடிப்படை

வசதிகள் செய்து தர வேண்டும் என மக்கள் கூறுகின்றனர்.



திறந்தவெளியில் தான் எல்லாமே

இப்பகுதியில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கழிப்பறைகள் தண்ணீர் இன்றி பல வருடங்களாக பயன்பாடின்றி கிடக்கிறது.

லட்சக்கணக்கில் செலவு செய்தும் யாருக்கும் பயன்படாமல் உள்ளது. தண்ணீர் வசதி செய்து தர கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. திறந்தவெளியை தான் கழிப்பறையாக பயன்படுத்த வேண்டிய நிலைஉள்ளது.

-முனீஸ்வரி, குடும்பத்தலைவி



தண்ணீர் வசதி வேண்டும்

எங்கள் காலனிக்கு மட்டும் நகராட்சி குடிநீர் வழங்கப்படுவது இல்லை. பகிர்மான குழாய்கள் பதிக்காததால், குடிநீர் இணைப்பு பெற முடியாத நிலையில் உள்ளது.

வாரத்திற்கு 1 முறை நகராட்சி லாரி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. அதுவும் லாரி பழுதென்று 15 நாட்களாக தண்ணீர் வரவில்லை. தண்ணீருக்கு மிகவும் சிரமப்படுகின்றோம்.

-ராஜகுமாரி, குடும்பத்தலைவி



தரமான ரோடு வேண்டும்

பல வருடங்களுக்கு முன்பு தெருக்களில் போட்ட ரோடு, இன்றைக்கு குண்டும் குழியுமாக உள்ளது. தெருவில் நடந்து செல்ல முடியவில்லை.

பள்ளி மாணவர்கள் செல்ல சிரமப்படுகின்றனர். சைக்கிளில் சென்றால் டயர் பஞ்சர் ஆகிறது. அடிப்படை வசதிகள் கேட்டு, நகராட்சி வரை சென்று கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

-தமிழ்செல்வி, குடும்பத்தலைவி



கழிவுநீரால் சுகாதாரக்கேடு

தெருவில் உள்ள வாறுகால்களில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடாக உள்ளது.

கொசு தொல்லை தாங்க முடியவில்லை. குப்பை கொட்ட குப்பை தொட்டியும் இல்லை, குப்பைகளை வாங்க வருவதும் இல்லை. இதனால், தெருக்கள் முழுவதும் குப்பையாக பரவிக் கிடக்கிறது. பலமுறை மனு கொடுத்தும் பலன் இல்லை. இக்காலனியை நகராட்சி புறக்கணிக்கிறது.

-கற்பகம், குடும்பத்தலைவி

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X