அவனியாபுரம்: துபாயிலிருந்து நேற்று மதுரை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணிகளை சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி கமிஷனர் வெங்கடேஷ்பாபு தலைமையில் சோதனையிட்டனர். கூடலுார் திட்டக்குடி பென்னாடம் பகுதியை சேர்ந்த சர்புதீன் என்பவரதுபெட்டிக்குள் மல்டிமீடியா ஸ்பீக்கர் சிஸ்டம் இருந்தது.அதற்குள் 44 தங்கத் தகடுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.26 லட்சம்.