நீதிமன்றம் உத்தரவால் மோசடி வழக்குகள் அதிகரிப்பு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2019
06:12

மதுரை : மதுரை நகரில் நீதிமன்றம் உத்தரவுபடி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்படுவது அதிகரித்துள்ளது. வாரத்தில் குறைந்தது 2 வழக்குகள் பதிவாகின்றன.இடம், பணம், நகை மோசடிக்காக போலீசில் புகார் செய்வது அதிகரித்துள்ளது. விசாரிக்கும் போலீசார் முடிந்தளவு வழக்குப்பதிவு செய்வதை தவிர்க்கின்றனர். போலீஸ் கமிஷனர், துணைகமிஷனர்கள் பரிந்துரைத்தால் வழக்குப்பதிவு செய்கின்றனர். ஆனால் தொடர் விசாரணையின்றி வழக்குகள் கிடப்பில் போடப்படுகின்றன. அதிகாரிகள் நெருக்கடி இருந்தால் மட்டும் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இத்தகைய காரணங்களால் சிலர் நீதிமன்றங்களை நாடி வழக்குப்பதிவு செய்ய அனுமதி பெறுகின்றனர். சிலர் ஸ்டேஷனிற்கு கூட நேரில் புகார் தெரிவிக்காமல் ஆன்லைன், தபாலில் புகார் தெரிவித்துவிட்டு, அதை ஆதாரமாக வைத்து 'போலீஸ் வழக்குப்பதிவு செய்யவில்லை' எனக்கூறி நீதிமன்ற உத்தரவு பெறுகின்றனர். இந்த வகையில் மோசடி தொடர்பாக நகரில் அக்.,1, 8ல் தலா இரு வழக்குகள், அக்.,9ல் ஐந்து, 11ல் ஒன்று, 14,15ல் தலா ஒரு வழக்கும் நீதிமன்றம் உத்தரவுபடி பதிவு செய்யப்பட்டுள்ளன.போலீசார் கூறுகையில், ''தொடர் விசாரணைக்கு ஆஜராகாமலும், எதிர்தரப்பை மிரட்டவும் வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பெறுகின்றனர். அந்த உத்தரவைகூட மனுதாரர்கள் நேரில் வழங்காமல் பதிவு தபாலில் அனுப்புகின்றனர். வழக்குப்பதிவு செய்ததை வைத்து அவர்களுக்குள் 'கட்டப்பஞ்சாயத்து' பேசி சமரசம் செய்து கொள்கின்றனர். ஆனாலும் சில வழக்குகளில் கைதும் செய்திருக்கிறோம்'' என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-அக்-201908:10:47 IST Report Abuse
Sriram V Any property going to judiciary will never be returned. Even petty straight forward cases, judiciary is not giving judgement. We lost 5 poun gold in 1998 and police promptly caught hold of thiefs and property. They handed over the property to court. I atted the court five times from Neyveli to kumbokonam in span of one year and case was never came for hearing. This is because of inefficient lawyers were promoted to judge level by Dravidian corrupt politicians. It must change. District judiciary tem is full of corrupt people
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X