மதுரை : திருமங்கலத்தை சேர்ந்த தம்பதி சின்னச்சாமி, அருள்மாலா. நேற்று திருமங்கலம் - உசிலம்பட்டி சாலையில் நடந்த வாகன விபத்தில் காயம் அடைந்தனர். அப்போது கைப்பை தவறியது. அவ்வழி சென்ற கிரியகவுண்டன்பட்டி தட்சிணாமூர்த்தி, பாண்டியம்மாள் தம்பதி அதை எடுத்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். பையில் 6 பவுன் சங்கிலி, அலைபேசி, ரூ.500 இருந்தது. தம்பதியின் நேர்மையை பாராட்டி பரிசு, சான்றிதழ் வழங்கி எஸ்.பி., மணிவண்ணன் கவுரவித்தார்.