கோயில் திருவிழாவில் கல்வீச்சு; ஒருவர் காயம் | மதுரை செய்திகள் | Dinamalar
கோயில் திருவிழாவில் கல்வீச்சு; ஒருவர் காயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2019
06:13

எழுமலை: எழுமலை சூலப்புரம் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு ஒரு தரப்பினர் நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது மற்றொரு தரப்பினர் கல்வீசியதில் வேடன் 31 என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. கல்வீச்சில் ஈடுபட்ட சிங்கராஜ், சுந்தரமூர்த்தி, முருகன் ஆகியோரை கைது செய்யக்கோரி ஒரு தரப்பினர் எழுமலை- எம்.கல்லுப்பட்டி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., ராஜா தலைமையில் போலீசார்,கல்வீச்சில் ஈடுபட்ட சிங்கராஜ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை கைது செய்வதாகவும் சமாதானம் செய்தனர். ஆனால் மற்றொருதரப்பினர் கைது செய்தவர்களை விடுவிக்க கோரி மறியலில் ஈடுபட்டனர். கல்லுப்பட்டி ஸ்டேஷனில் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளையடுத்து மறியல் கைவிடப்பட்டது. மறியலால் காலை 8:00 முதல் மாலை 5:40 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X