மதுரை: மதுரை மாவட்ட ஆணழகன் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான மிஸ்டர் மதுரை 2019 போட்டி நடந்தது.இப்போட்டியில் 30 உடற்பயிற்சி பள்ளிகளை சேர்ந்த 150 பேர் பங்கேற்றனர். ஐ.எப்.பி.எஸ். உடற்பயிற்சி பள்ளி யோகேஷ் கண்ணன் சாம்பியன் பட்டம், பெஸ்ட் பார் மிஸ்டர் மதுரை பட்டத்தை வார் ஹவுஸ் உடற்பயிற்சி பள்ளி அஜித்குமார் பெற்றனர். 63 புள்ளிகள் பெற்ற சாம்சன் பள்ளி பெஸ்ட் ஜிம் பட்டம் வென்றது. அமைச்சர் உதயகுமார், சங்க செயலாளர் ரமேஷ்பாபு, நிர்வாகிகள் பங்கேற்றனர்.