| வேப்ப மரத்தில் மின்னல் தாக்கி தம்பதி காயம்; பொருள் சேதம் Dinamalar
வேப்ப மரத்தில் மின்னல் தாக்கி தம்பதி காயம்; பொருள் சேதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2019
08:15

மேச்சேரி: வேப்பமரத்தில் மின்னல் தாக்கியதால், தம்பதியர் காயமடைந்தனர். அத்துடன், வீட்டிலுள்ள பொருட்கள் சேதமடைந்தன.


சேலம் மாவட்டம், மேச்சேரி, கூணான்டியூர், மேற்கு காட்டுவலவைச் சேர்ந்த விவசாயி சுந்தரம், 40. இவரது மனைவி நல்லம்மாள், 35. நேற்று மதியம், 2:45 மணிக்கு, மேற்கு காட்டுவளவு சுற்றுப்பகுதியில் கனமழை பெய்தது. அப்போது, சுந்தரம் வீடு அருகே இருந்த வேப்பமரத்தில், மின்னல் தாக்கியது. அதில், மரத்தின் சில பகுதி கருகி, அதன் அருகே நின்றிருந்த நல்லம்மாளின், இடதுபுற முகம், கை, காலில் தீக்காயம் ஏற்பட்டது. மேலும், பலத்த இடி சத்தத்தால், வீட்டிலிருந்த சுந்தரத்தின் காது செவிடானது. மின்மீட்டர், டி.வி., உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் கருகி சேதமாகின. காயமடைந்த தம்பதியர், ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X