மழைநீர் கசியும் பள்ளி வகுப்பறை: இடிந்துவரும் சத்துணவு கட்டடம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2019
08:16

ஆத்தூர்: பள்ளி வகுப்பறையில், மழைநீர் கசிவதோடு, சத்துணவு கட்டடம் இடிந்து விழுந்து வருவதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஆத்தூர், அம்மம்பாளையம் ஊராட்சி, செக்காரமேட்டில், 1992ல், அரசு தொடக்கப்பள்ளி கட்டப்பட்டது. அங்கு, 14 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆனால், வகுப்பறை கட்டட முன்புறம், மேற்புற பகுதியில், மழைநீர் கசிந்து, சேதமடைந்து வருகிறது. குறிப்பாக, சத்துணவு மைய கட்டடம், கடந்தாண்டு முதல், கொஞ்சம், கொஞ்சமாக இடிந்து விழுந்து வருகிறது. இந்த கட்டடத்தை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளதால், அருகிலுள்ள ஊராட்சி 'டிவி' அறையை, ஓராண்டாக சமையற்கூடமாக பயன்படுத்துகின்றனர். அது, குறுகிய இடமாக உள்ளதால், பொருட்களை வைத்து சமைப்பதில் சிரமம் உள்ளது. உணவு பொருட்களை, பள்ளி வகுப்பறையில் வைத்திருக்க வேண்டியுள்ளது. சத்துணவு மையம் புதிய கட்டடம் மற்றும் வகுப்பறை மராமத்து பணி மேற்கொள்ளக்கோரி, அதிகாரிகளிடம், மக்கள் பலமுறை மனு அளித்தும் கண்டுகொள்ளவில்லை. இதனால், மழைக்காலங்களில் மாணவர்கள் அவதிப்படுவது தொடர் கதையாக உள்ளது. அதனால், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆத்தூர் பி.டி.ஓ., ராஜேந்திரன் கூறுகையில், ''ஆய்வு செய்து, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X