| அதிகாரிகள் கவனத்திற்கு - வேலூர் Dinamalar
அதிகாரிகள் கவனத்திற்கு - வேலூர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2019
08:17

சேவை மையம் திறக்கப்படுமா? ஏலகிரியில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், பஞ்., நிர்வாகம் சார்பில், சேவை மையம் கட்டப்பட்டது. இதில், பட்டா, சிட்டா வழங்குதல், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், ஆதார் கார்டில் திருத்தம், வருமானம், ஜாதி மற்றும் இருப்பிட சான்றிதழ்களை மக்கள் எளிதில் பெற, இது கட்டப்பட்டது. இது திறக்கப்படாமல் உள்ளதால், இவ்வாறான சான்றிதழ்களை பெற, பொதுமக்கள் நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்துக்கு சென்று வருகின்றனர்.



தண்ணீர் இல்லாத குடிநீர் தொட்டி: ஏலகிரி பஞ்., போலனஹள்ளியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ளோரின், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, கடந்த, 2015ல் சிறுமின்விசை பம்புடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. மக்கள் பயனடைந்து வந்த நிலையில் கடந்த, இரண்டாண்டுக்கு முன், தொட்டியின், மின்மோட்டார் பழுதானது. இதனால், இத்தொட்டிக்கு தண்ணீர் வரத்து பாதிக்கப்பட்டு தற்போது வரை, காட்சி பொருளாக மட்டும் உள்ளது.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X