கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும், அக்.,21 காலை, 10:00 மணிக்கு கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு சென்னை ஓய்வூதிய இயக்குனர் வருவதால், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதியம் தொடர்பான மனுக்களை இரட்டை பிரதியில், வரும், அக்.,5க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.