வேளாண் காடு வளர்ப்பு முறைக்கு 70 ஆயிரம் விவசாயிகள் மாற்றம்: ஈஷா ஒருங்கிணைப்பாளர் தகவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2019
08:40

கிருஷ்ணகிரி: ''ஈஷாவின் முயற்சியால், தமிழகம் முழுவதும், 70 ஆயிரம் விவசாயிகள் வேளாண் காடு வளர்ப்பு முறைக்கு மாறியுள்ளனர்,'' என, ஈஷா வேளாண் காடுகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கூறினார்.


இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஈஷா வேளாண் காடுகள் திட்டத்தில், மரம் வளர்க்க விரும்பும் விவசாயிகளுக்கு அவர்களின் நிலத்துக்கே, நேரடியாக சென்று மண்ணையும், நீரையும் பரிசோதித்து மண்ணுக்கேற்ற மரங்களை பரிந்துரைக்கிறோம். ஈடுபாட்டுடன் மரம் வளர்க்கும் விவசாயிகளின் நிலங்களுக்கு சென்று, ஆலோசனை வழங்குகிறோம். ஈஷாவின் முயற்சியால், தமிழகம் முழுவதும், 70 ஆயிரம் விவசாயிகள் வேளாண் காடு வளர்ப்பு முறைக்கு மாறியுள்ளனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில், கணேசன் என்ற விவசாயி, 50 ஏக்கர் மானாவாரி நிலத்தில், மழை நீரை மட்டும் வைத்து, 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக மரப்பயிர் விவசாயம் செய்கிறார். இவர், பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வேளாண் காட்டை உருவாக்கி இருக்கிறார். இவரது, பிரம்ம வனம் என்ற வேளாண் காட்டில், வரும், 20ல் மரப்பயிர் கருத்தரங்கு நடக்கிறது. இதில், பெங்களூரு மர அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவன விஞ்ஞானி, டாக்டர் சுந்தர்ராஜ், சந்தன மரம் வளர்ப்பு மற்றும் அதை மதிப்பு கூட்டி சந்தைபடுத்துதல் குறித்து பேசுகிறார். பல விவசாயிகள் தங்களின் வெற்றி அனுபவங்களை பகிர உள்ளனர். இந்த கருத்தரங்கில் பங்கேற்க ஆர்வமுள்ள விவசாயிகள், 94425 90068, 94425 90079 என்ற எண்களில் தொடர்பு கொண்டு, பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X