கணவரின் கள்ளக்காதலியை கொன்ற மனைவிக்கு ஆயுள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2019
09:38

கிருஷ்ணகிரி: கணவரின் கள்ளக்காதலியை கொன்ற மனைவிக்கு, ஆயுள் தண்டனை விதித்து, கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


கிருஷ்ணகிரி அடுத்த பெத்த தாளாப்பள்ளியை சேர்ந்தவர் முத்துசாமி, 35. ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி சித்ரா, 27. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த ஜெயபால் மனைவி வெண்ணிலா, 30. இவருக்கும் முத்துசாமிக்கும், கள்ளத்தொடர்பு இருந்தது. இது தொடர்பாக சித்ராவிற்கும், வெண்ணிலாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த, 2017 அக்.,21ல், வெண்ணிலா வீட்டிற்கு சென்ற சித்ரா, தன் கணவனுடனான கள்ளத்தொடர்பை கைவிட கூறினார். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். ஆத்திரமடைந்த சித்ரா, அங்கிருந்த கத்தியால் வெண்ணிலாவை குத்திக்கொன்றார். அப்போதைய கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் அன்புமணி, வழக்குப்பதிவு செய்து, சித்ராவை கைது செய்தார். இந்த வழக்கு, கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சித்ராவிற்கு, ஆயுள் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜரானார்.


 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X