| தமிழகத்தில் ஏரி, குளம் தூர்வாரிய பணிக்கு வெள்ளையறிக்கை வெளியிட வலியுறுத்தல் Dinamalar
தமிழகத்தில் ஏரி, குளம் தூர்வாரிய பணிக்கு வெள்ளையறிக்கை வெளியிட வலியுறுத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2019
09:39

சேலம்: ''ஏரி, குளங்களை தூர்வாரிய பணிக்கு, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,'' என, இ.கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.


தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு கூட்டம், சேலத்தில், நேற்று நடந்தது. அதில், பொதுச்செயலர் பெரியசாமி தலைமை வகித்தார். அதில் பங்கேற்ற, இ.கம்யூ., மாநில செயலர் முத்தரசன் அளித்த பேட்டி: மத்திய அரசின், தவறான பொருளாதார கொள்கையால், தொழில்கள் பாதிப்படைந்துள்ளன. பொருட்கள் விலை உயர்ந்து, சாதாரண மக்கள், வாங்கும் சக்தியை இழந்துவிட்டனர். தமிழகத்தில், 1,000 கோடி ரூபாயில், ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டதாக, முதல்வர் கூறிவருகிறார். ஆனால், தூர்வாரிய குளங்களை பார்க்கச்சென்றால், அதுபோன்ற எந்த பணிகளும் நடக்கவில்லை. இதுகுறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய விளக்கமளிக்க வேண்டும். டெங்கு காய்ச்சலால், பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுகுறித்து கவலைப்படாமல், அமைச்சர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். சிதம்பரம் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனநாயகம் மீது நம்பிக்கையற்ற கட்சியாக, பா.ஜ., சர்வாதிகார ஆட்சி செய்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X