தீபாவளிக்கு இனிப்பு தயாரிப்பு தீவிரம்: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு அவசியம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2019
22:54

உடுமலை:தீபாவளி பண்டிகைக்கு, உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலுள்ள கடைகளில், இனிப்பு, காரம் உள்ளிட்டவை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. தரமற்ற எண்ணெய்கள், மாவு வகைகள் மற்றும் தடை செய்யப்பட்ட நிறமிகள் பயன்படுத்தி, சுகாதாரமற்ற முறைகளில், தயாரிக்கப்பட்டு வருகிறது.


உணவு பாதுகாப்பு துறை சார்பில், கடைகள், வணிக நிறுவனங்களில், தீபாவளி பண்டிகைக்கு தயாரிக்கப்படும் இனிப்புகள், பலகாரங்கள் மற்றும் கேக் போன்ற உணவுப் பொருட்கள் தயாரிப்பின் போது, தொழிலாளர்கள் கையுறைகள், தலைக்கவசம், மேலங்கிகள் அணிய வேண்டும்.தயாரிப்பு மற்றும் விற்கும் இடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், சமைப்பதற்கும், துாய்மை செய்வதற்கும், நன்னீரை பயன்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும், மீண்டும் சூடுபடுத்தி உபயோகப்படுத்த கூடாது.இனிப்புகளில், செயற்கை நிறமூட்டிகள் அனுமதிக்கப்பட்ட அளவே சேர்க்க வேண்டும்; காரங்களில் செயற்கை வண்ணங்கள் சேர்ப்பது சட்டப்படி குற்றமாகும். நெய் மற்றும் இதர பொருட்கள் வாங்கியதற்கான பில் விவரங்களை பராமரிக்க வேண்டும்.


பேக்கிங் செய்து அனுப்பும் பொழுது தயாரிப்பு தேதி, உபயோகப்படுத்தும் காலம், பேட்ச் எண், தயாரிப்பாளர் முகவரி உள்ளிட்ட தகவல்களுடன் லேபிள் இருக்க வேண்டும்.இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் நீரின் தரத்தினை அறியும் வகையில், பகுப்பாய்வு சான்று கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.ஆனால், உடுமலையிலுள்ள பெரும்பாலான கடைகளில் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. எனவே, உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X