| மின்கம்பிகளால் ஆபத்து Dinamalar
மின்கம்பிகளால் ஆபத்து
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2019
23:32

பொள்ளாச்சி ராஜராஜேஸ்வரி நகரில், லாரி உரசிய மின்கம்பத்தில் மின் கம்பிகள் தாழ்வாக தொங்கிக்கொண்டு இருக்கிறது. மின்வாரியத்திடம் புகார்செய்தும் நடவடிக்கை இல்லை.என்.செல்வபிரகாஸ், பொள்ளாச்சி


மைதானம் சீரமைக்கணும்


வால்பாறை நகரின் மத்தியில் உள்ள நகராட்சிவிளையாட்டு மைதானத்தை, மாணவர்கள் நலன் கருதி சீரமைக்க வேண்டும்.க.அபு, வால்பாறை.


சுகாதாரம் பாதிப்பு


ஆனைமலை அடுத்த திவான்சாபுதுார் ஊராட்சியில், ஆங்காங்கே குப்பை தேங்கி கிடப்பதால், துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதாரம் பாதிக்கிறது.கி.ராஜ்குமார், பொள்ளாச்சி.


கழிவுநீரால் தொல்லை


பொள்ளாச்சி - உடுமலை ரோடு கணேஷ் நகரில், மாக்கினாம்பட்டி ஊராட்சியில் இருந்து வரும் கழிவுநீர் தேங்கி நிற்பதால், சுகாதாரம் பாதித்து கொசுத்தொல்லை அதிகரிக்கிறது.சி.வெள்ளிங்கிரி, பொள்ளாச்சி.


போக்குவரத்து நெரிசல்


உடுமலை, பசுபதி வீதியில் சரக்கு வாகனங்கள் விதிமுறை மீறி நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எம்.பாலாஜி, உடுமலை.


சுகாதார சீர்கேடு


உடுமலை, நேரு வீதி எக்ஸ்டன்சன் ரோட்டில்குப்பைக்கழிவுகள் திறந்தவெளியில் குவிந்துகிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.ஆர்.பாலகுமார், உடுமலை.


நோய் பரவும் அபாயம்


உடுமலை, ஜெயலானி காலனியில் சாக்கடைகால்வாய் துார்வாரப்படாமல் இருப்பதால், கழிவுநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் உள்ளது.ஆர்.மணிகண்டன், உடுமலை.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X