| வாகன கட்டணம்: பேரூராட்சி தற்காலிக வசூல் Dinamalar
வாகன கட்டணம்: பேரூராட்சி தற்காலிக வசூல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2019
23:34

மாமல்லபுரம்: மாமல்லபுரம் வரும், சுற்றுலா வாகனங்களுக்கு, பேரூராட்சி நிர்வாகம், நுழைவுக்கட்டணம்; புதுநகர் வளர்ச்சிக் குழுமம், வாகனம் நிறுத்துமிட கட்டணம் வசூலிக்கின்றன.இக்கட்டணங்களை, பேரூராட்சி நிர்வாகமே வசூலித்து, இரு நிர்வாகங்களும், பங்கிட்டுக் கொள்கின்றன.இக்கட்டணம் வசூ லிக்க, கடந்த ஆண்டு உரிமம் பெற்ற, தனியாரிடமே, அடுத்தடுத்த மூன்று மாதங்கள் என, உரிமம் நீட்டிக்கப்பட்டது. செப்., 30ல், உரிமம் முடிந்தது.பிரதமர் - சீன அதிபர் வருகை முன்னிட்டு, 1 - 15ம் தேதி வரை, நுழைவுக்கட்டணம், ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், இலவச வாகன அனுமதிக்கு, கட்டணம் வசூலித்துள்ளார்.இதனால் எழுந்த சர்ச்சையை அடுத்து, இதற்கான ஏற்பாடுகள் செய்யும் வரை, தற்காலிகமாக, பேரூராட்சி நிர்வாகமே, கட்டணம் வசூலிப்பதாக, செயல் அலுவலர், லதா தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X