| அடிக்கடி நடக்கும் திருட்டால் நெல்லிக்குப்பம் மக்கள் பீதி Dinamalar
அடிக்கடி நடக்கும் திருட்டால் நெல்லிக்குப்பம் மக்கள் பீதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2019
23:34

திருப்போரூர்: அடிக்கடி நடக்கும் திருட்டால், நெல்லிக்குப்பம் கிராமத்தினர் பீதி அடைந்துள்ளனர். தொடர் திருட்டை தடுக்க, போலீசார், இரவு ரோந்து வர வேண்டும் என, அவர்கள் வலியுறுத்துகின்றனர்.திருப்போரூர் அருகே நெல்லிக்குப்பத்தில், வேண்டவராசி அம்மன் கோவில், பெருமாள் கோவில், கெங்கையம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன.தவிர, அரசு தொடக்கம் மற்றும் மேல்நிலைப் பள்ளி, வங்கிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.இந்நிலையில், இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 10ம் தேதி இரவு, திருட்டு நடந்துள்ளது.தலைமை ஆசிரியர் அறையில் இருந்த இரண்டு கணினிகள் திருடு போயிருந்தன. இதன் மதிப்பு, 60 ஆயிரம் ரூபாய். இதே பள்ளியில், ஜூலை மாதம் திருட்டு முயற்சி நடந்துள்ளது.அதேபோல், கடந்தாண்டு, டிசம்பர் மாதம், இங்குள்ள சில கோவில்களிலும் பூஜை பொருட்கள் திருடு போனதாக கூறப்படுகிறது.இப்பகுதியில், அடிக்கடி திருட்டு நடப்பதால், நெல்லிக்குப்பம் கிராமத்தினர் பீதி அடைந்துள்ளனர்.எனவே, காயார் போலீசார், இப்பகுதியில் இரவு ரோந்து மேற்கொள்ள வேண்டும் என, கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X