| தீபாவளிக்கு முன் கரும்புக்கான பாக்கி கிடைக்குமா?: அதிகாரிகளிடம் விவசாயிகள் சரமாரி கேள்வி Dinamalar
தீபாவளிக்கு முன் கரும்புக்கான பாக்கி கிடைக்குமா?: அதிகாரிகளிடம் விவசாயிகள் சரமாரி கேள்வி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2019
23:40

காஞ்சிபுரம்: 'தீபாவளிக்கு முன்பாக, கரும்புக்கான நிலுவை தொகையை, ஆலை நிர்வாகம் வழங்குமா' என, விவவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில், விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி தலைமையில், நேற்று காலை நடந்தது.வேளாண் துறை இணை இயக்குனர் அசோகன், கூட்டுறவு துறை இணை பதிவாளர் சந்திரசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், விவசாயிகள் கூறியதாவது:விவசாயிகள்: மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், பல மாதங்களாக நிலுவையில் உள்ள பாக்கி பணம் எப்போது கிடைக்கும்; தீபாவளிக்கு முன் கிடைக்குமா?சுந்தரமூர்த்தி, டி.ஆர்.ஓ.: தீபாவளிக்குள் கரும்பு நிலுவை தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.ஞானசம்பந்தன், களக்காட்டூர்: எங்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள கீழ்பெரமநல்லுார், காலுார், காளக்காட்டூர் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. விவசாயிகளுக்கு பெரும் தொந்தரவாக உள்ளது.டி.ஆர்.ஓ.: மின்வாரிய அதிகாரிகள், உடனடியாக இப்பிரச்னையை கவனிக்க அறிவுறுத்துகிறேன்.விவசாயிகள்: சிறுவாக்கம் மோட்டூர் கிராமத்தில், நீண்ட காலமாகவே குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.டி.ஆர்.ஓ.: அதிகாரிகளை நேரில் வந்து பார்க்க சொல்கிறேன்.விவசாயிகள்: வாலாஜா பாத் அடுத்த நத்தாநல்லுாரில், தேவையற்ற பகுதிகளில் சாலை அமைக்கின்றனர். ஆனால், தேவையான இடங்களில் சாலை அமைக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர்.டி.ஆர்.ஓ.: மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகளிடம் கூறி, நடவடிக்கை எடுக்க சொல்கிறேன்.பரசுராமன், அரசாணி மங்கலம்: எங்கள் ஊரில் வினியோகிக்கும் குடிநீர் குழாயில், மர்ம நபர்கள், மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சுகின்றனர். மேலும், கழிவுநீருடன் கலந்து குடிநீர் வருவதால், சிரமப்படுகிறோம்.டி.ஆர்.ஓ.: பி.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து அதிகாரிகளை அனுப்பி, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.ராம்குமார், மானாம்பதி: மாடு கொட்டகை அமைக்க, கால்நடை மருந்தகத்துக்கு நடையாய் நடக்கிறேன்; ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.கால்நடைத்துறை அதிகாரி: மாடுகளுக்கு கொட்டகை அமைக்கும் பணி, பி.டி.ஓ., அலுவலகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. உங்களது மனுக்களை பி.டி.ஓ., அலுவலகத்திற்கு அனுப்புகிறேன்.இவ்வாறு, கூட்டம் நடைபெற்றது.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X