பருவமழையை எதிர்கொள்ள ஏற்பாடு: தயார் நிலையில் 50 குழுக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2019
23:43

காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 50 குழுக்கள் தயாராக இருப்பதாக, கலெக்டர் பொன்னையா, நேற்று தெரிவித்தார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்த, நிருபர்கள் சந்திப்பில், கலெக்டர் பொன்னையா, நேற்று கூறியதாவது:வடகிழக்கு பருவமழையை சந்திக்க, காஞ்சிபுரம் மாவட்டத்தில், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.மாவட்டம் முழுவதும், 515 இடங்கள் மழை பாதிப்புக்கு ஆளாகும் இடங்களாக கண்டறியப்பட்டு உள்ளன.இந்த இடங்களை கண்காணிக்க, 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.மேலும், தீயணைப்பு, போலீஸ், வருவாய் துறை என, 11 துறை அதிகாரிகள் உடைய, 50 குழுக்கள், மாவட்டம் முழுவதும் உருவாக்கப்பட்டு உள்ளன.மணல் மூட்டைகள், பொக்லைன், மரம் வெட்டும் கருவி, பாம்பு பிடிப்போர், படகு, நீச்சல் தெரிந்தவர்கள், மின்சார உபகரணங்கள் என, அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.புயல், மழை குறித்து மீன்வளத்துறை சார்பில், மீனவர்களுக்கு உடனுக்குடன் தகவல்கள் தெரிவிக்கப்படும்.மழை பாதிப்பா...சுழற்றுங்கள் நம்பரை!மழைக்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை பதிவு செய்ய, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திலும், தாம்பரத்திலும், பேரிடர் மேலாண்மை துறை, கட்டுப்பாட்டு அறை திறந்துள்ளது.காஞ்சிபுரம் கட்டுப்பாட்டு அறையில் தகவல் தெரிவிக்க, 044 - -2723 7207; வாட்ஸ் ஆப்புக்கு, 94450 71077 என்ற எண்களை சுழற்றுங்கள்.தாம்பரம் கட்டுப்பாட்டு அறையில் தகவல் தெரிவிக்க, 044 - -2241 0050; வாட்ஸ் ஆப்புக்கு, 93840 94738 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X