பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே பூட்டிய வீட்டில், எட்டு பவுன் நகை திருடிய நபர்களை போலீசார் தேடுகின்றனர். பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டி சரஸ்வதி அவென்யூவை சேர்ந்தவர் ரவீந்திரன், 51, சத்தியமங்கலத்தின் தனியார் பேப்பர் மில்லில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி வீட்டு குடும்பத்துடன் உடுமலையில் உள்ள, அம்மா வீட்டுக்கு சென்றார். இரவு வீடு திரும்பிய போது, முன்கதவு பூட்டு மற்றும் பீரோவை உடைத்து, எட்டு பவுன் நகை திருடிச் சென்றது தெரியவந்தது. தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.