ஆனந்தம்! தட்டியெடுக்குது வடகிழக்கு பருவ மழை:ஒரே இரவில் நிரம்பியது தடுப்பணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

19 அக்
2019
02:29
பதிவு செய்த நாள்
அக் 19,2019 01:45

பேரூர்:ஆரம்பத்திலேயே ஆரவாரத்துடன் துவங்கியுள்ள வடகிழக்கு பருவமழையால், ஒரே இரவில் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. அனைத்து தரப்பினரும் ஆனந்தமழையில் நனைகின்றனர்.கோவை மேற்குத் தொடர்ச்சி மலையில், நேற்று முன்தினம் மாலையில் இருந்து, அதிகாலை வரை, கனமழை பெய்தது. சின்னாறு, பெரியாறுகளில் பெருக்கெடுத்த மழைநீர் நொய்யல் ஆற்றில் ஆர்ப்பரித்து செல்கிறது.


இதனால், உக்குளம், நண்டாங்கரை, பெரும்கோவில்பதி, சித்திரைச்சாவடி, சென்னனுார் தடுப்பணைகள் நிரம்பின. கிளை வாய்க்கால்கள் வழியே குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது.அதிகாலையில் பேரூர் படித்துறைக்கு வந்தடைந்த செந்நீர், நொய்யலில் பெருக்கெடுத்து ஓடுகிறது.இரவு முழுவதும் தட்டியெடுத்த கனமழையால், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது;பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பச்சினாம்பதி கிராத்துக்குள் தண்ணீர் புகுந்ததால், அங்குள்ள மக்களை மீட்ட வருவாய்த்துறையினர், பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர்.


அப்புச்சிமார் கோவில் - மத்திபாளையம் வரை, 4 கி.மீ.,க்கு, ரூ.2 கோடியில் அமைக்கப்பட்ட ரோட்டின் பெரும்பகுதி மழைநீரில் கரைந்தது. பேரூர் பட்டிவிநாயகர் கோவில் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் சாய்ந்தது; சீரமைக்கும் பணியில் மின்வாரியத்தினர் ஈடுபட்டுள்ளனர். படித்துறையில் உள்ள தற்காலிக பாலம் சேதமடைந்ததுடன், நீர்வரத்து அதிகரித்துள்ளதால், போக்குவரத்து தடைபட்டுள்ளது.தென்மேற்கு பருவமழை கைகொடுத்த நிலையில், வடகிழக்கு பருவமழையும் ஆரவாரத்துடன் துவங்கியுள்ளதால், அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X