'அசைவ சாப்பாட்டுக்கு, செட்டிநாடு சமையல்தான்' என்று சொல்பவர்கள் உண்டு. ஒருமுறை, ஆர்.எஸ்.புரம் டி.வி.சாமி ரோட்டில் உள்ள ஸ்ரீகாமாட்சி பட்டுக்கோட்டை மெஸ்சில் சாப்பிட்டார்கள் என்றால், 'அசைவ சாப்பாட்டுக்கு, பட்டுக்கோட்டையை அடிச்சுக்க முடியாது' என, பேசுவார்கள்.'சும்மா சொல்லக்கூடாது, ஆட்டுக்கறி வறுவலும், நாட்டுக்கோழி குழம்பும் அட்டகாசம் போங்க' என்று சொல்லும் அளவுக்கு, அசைவ சாப்பாடு அருமையாக இருக்கிறது.சாப்பாட்டுக்கு மட்டன், சிக்கன், மீன், நண்டு என, ஏழு வகையான அசைவ குழம்புகள் பரிமாறப்படுகின்றன. இதில் எலும்பு ரசமும், கருவாட்டு குழம்பும் வேறு லெவல்.சாப்பிடும் இடம் பார்க்க, குட்டி அரண்மனை போல் இருக்கிறது. குடும்பத்துடன் கூடி அமர்ந்து சாப்பிட ஏக வசதி. ஒரு சாப்பாட்டின் விலை, 229 ரூபாய், மட்டன் வருவலுடன் சேர்த்து வாங்கினால், 319 ரூபாய். வேறு ஐட்டங்கள் தேவை என்றால், தனியாக ஆர்டர் செய்து கொள்ளலாம். ''சாப்பிட வரும் வாடிக்கையாளர்களை, வீட்டுக்கு விருந்துக்கு வந்த சொந்தங்களை போல் கவனிப்போம்,'' என 'ருசியாக' பேசுகிறார் ஓட்டல் நிர்வாக இயக்குனர் நெடுமாறன்.எப்படி கவனிக்கிறார்கள் என்று ஒரு எட்டு போய்த்தான் பாருங்களேன்!நல்லெண்ணெய் நாட்டுக்கோழி சுக்கா, கோழி உப்புக்கறி, வஞ்சரம் வருவல், மட்டன் கோலா உருண்டை, சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணிதான் எங்கள் ஸ்பெஷல். குழந்தைகள் விருப்பத்துக்கு ஏற்ப, சைனீஸ் உணவு வகைகளும் உள்ளன. சமையலுக்கு நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மட்டுமே பயன்படுத்துகிறோம்.- நெடுமாறன், நிர்வாக இயக்குனர்