கோவை:கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட, அரசு டாக்டர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது. மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக, சம்பள உயர்வு வழங்க கோரி, வரும் 30, 31ல் நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மாநில தலைவர் செந்தில், மாநில செயலாளர் ரவி சங்கர், மாவட்ட செயலாளர் ஜெய்சிங் பங்கேற்றனர்.