| லாரி மோதி மின்கம்பம் முறிந்தது: மின் சப்ளை துண்டிப்பு; அசம்பாவிதம் தவிர்ப்பு Dinamalar
லாரி மோதி மின்கம்பம் முறிந்தது: மின் சப்ளை துண்டிப்பு; அசம்பாவிதம் தவிர்ப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 அக்
2019
02:07

பல்லடம்:பல்லடம் அருகே, லாரி மோதியதில், மின் கம்பம் முறிந்தது. இதனால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.திண்டுக்கல்லில் இருந்து லாரி ஒன்று, நேற்று காலை, பல்லடம் நோக்கி வந்தது. சித்தம்பலம் அருகே, கட்டுப்பாட்டை இழந்த லாரி, ரோட்டோரத்தில் இழந்த லாரி, ரோட்டோர பள்ளத்தில் இறங்கியது. அங்கிருந்த உயர் அழுத்த மின் கம்பத்தின் மீது மோதியதில், மின்கம்பம் இரண்டாக உடைந்து, மின் கம்பிகள் கீழே தொங்கின.மேலும், மின் கம்பத்தின் மீது மோதியும் நிற்காமல் சென்ற லாரி, பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில், லாரியின் வீல்கள் கழன்று, முன்பக்கம் சேதம் அடைந்தது. உடனடியாக அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், மின் இணைப்பு சரி செய்து, பொக்லைன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினர்.உயரழுத்த மின் கம்பத்துடன் ஏராளமான மின் இணைப்புகள் உள்ள நிலையில், அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X