ஜி.எஸ்.டி., 'ரீபண்ட்' தாமதமின்றி வேண்டுமா? கருத்தரங்கில், அதிகாரி விளக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2019
02:13

திருப்பூர்:'முறையான ஆவணங்களை சமர்ப்பித்தால், எவ்வித தாமதமும் இன்றி, ஏற்றுமதியாளர்கள்ஜி.எஸ்.டி., ரீபண்ட் பெறலாம்,' என, கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.ஜி.எஸ்.டி., ரீபண்ட் பெறுவது குறித்த கருத்தரங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் நேற்று நடந்தது. சங்க தலைவர் ராஜா சண்முகம் தலைமை வகித்தார்.இணைச்செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மோகன், மத்தியஜி.எஸ்.டி., துணை கமிஷனர் சித்தார்த்தன் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் வேலுசாமி வரவேற்றார்.ஜி.எஸ்.டி., கோவை கோட்ட இணை இயக்குனர் பெரியசாமி பேசியதாவது:திருப்பூரில், 2,038 ஏற்றுமதி ஆவணங்களுக்கு, ரீபண்ட் வழங்க வேண்டியிருந்தது. வரித்துறை அதிகாரிகள்,ஞாயிறு விடுமுறை தினங்களிலும், ஆவணங்களை தணிக்கை செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆகஸ்ட் 31ம் தேதிக்கு முன்பு வரை, உரிய ஆவணங்களுடன் நேரடியாக விண்ணப்பித்த ஏற்றுமதியாளர் அனைவருக்கும் ரீபண்ட் வழங்கப்பட்டுவிட்டது.தற்போது, நேரடியாக ரீபண்ட் கேட்டு விண்ணப்பிக்கும் நடைமுறைகள் இல்லை. முற்றிலும், 'ஆன்லைன்' என்பதால், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் ஏற்றுமதியாளர்களுக்கு, உடனடியாக ரீபண்ட் தொகை விடுவிக்கப்படுகிறது.சுங்க வரித்துறை, சந்தேகத்துக்கு இடமான ஏற்றுமதியாளர்கள் (ரிஸ்கி எக்ஸ்போர்ட்டர்) பட்டியல் தயாரித்துள்ளது. இந்த பட்டியலில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை தணிக்கைக்கு உட்படுத்த, மத்திய ஜி.எஸ்.டி., வரி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, அதிகாரிகள் தணிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில், குறிப்பிட்ட ஏற்றுமதி நிறுவனம் குறிப்பிட்ட இடத்தில் உள்ளதா; இயக்கத்தில் உள்ளதா என, நேரடியாக கள ஆய்வு நடத்தப்படும்.அடுத்து, நிறுவனங்களின் ஆவணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. ஏற்றுமதி செய்யாமலேயே, ரீபண்ட் பெறுவது; போலிரசீதுகள் பயன்படுத்தப்பட்டுள்ளனவா; ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல், ரீபண்ட் பெறுவதற்கு வழங்கியுள்ளனவா என, அனைத்தும் பரிசோதிக்கப்படுகிறது; ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பின், ரீபண்ட் நிறுத்தி வைக்கப்படும்.ஜி.எஸ்.டி., போர்ட்டரில், வர்த்தகர்கள், பொதுமக்கள் அனைவரும், மிக எளிதாக ஜி.எஸ்.டி.,பதிவு எண்ணை பரிசோதிப்பதற்கான பிரிவு உள்ளது. அதில், ஜி.எஸ்.டி., பதிவு எண்ணை உள்ளீடு செய்தால், விவரங்களை பெறலாம். இவ்வாறு, அவர் பேசினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X