கடலுார் : கடலுார் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்ட 6 பேர் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.
கடலுார் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் 11 பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில், 4 பேர் கடலுாரைச் சேர்ந்தவர்கள். நேற்று காய்ச்சலில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்த 19 பேரில், 6 பேருக்கு டெங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில், இருவர் கடலுாரைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வில்லிய நல்லுார், வரக்கால்பட்டு, உய்யகொண்டராவி பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.