கடலுார் மாவட்டத்தில் 6 பேருக்கு 'டெங்கு' | கடலூர் செய்திகள் | Dinamalar
கடலுார் மாவட்டத்தில் 6 பேருக்கு 'டெங்கு'
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 அக்
2019
03:17

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்ட 6 பேர் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.



கடலுார் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் 11 பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில், 4 பேர் கடலுாரைச் சேர்ந்தவர்கள். நேற்று காய்ச்சலில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்த 19 பேரில், 6 பேருக்கு டெங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில், இருவர் கடலுாரைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வில்லிய நல்லுார், வரக்கால்பட்டு, உய்யகொண்டராவி பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X