மங்கலம்பேட்டை : மங்கலம்பேட்டை அடுத்த எடைச்சித்துாரில் இன்று இலவச மருத்துவ முகாம் நடக்கிறது.
மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில், எடைச்சித்துாரில் இலவச மருத்துவ முகாம் இன்று (19ம் தேதி) காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது.முகாமில், அறுவை சிகிச்சை, புற்றுநோய், சர்க்கரை, ரத்த அழுத்தம், பொது மருத்துவம், சித்த மருத்துவம், மகப்பேறு நலம், கண் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எடைச்சித்துார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.