கரூர் வைஸ்யா வங்கியில் தீபாவளி சிறப்பு லோன் மேளா | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
கரூர் வைஸ்யா வங்கியில் தீபாவளி சிறப்பு லோன் மேளா
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 அக்
2019
04:25

திண்டிவனம் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திண்டிவனம் கரூர் வைஸ்யா வங்கியில், தீபாவளி சிறப்பு டிஜிட்டல் லோன் மேளா நடக்கிறது.வங்கியின் முதன்மை மேலாளர் தினேஷ் குமார் அறிக்கை:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு டிஜிட்டல் லோன் திருவிழா நேற்று 18ம் தேதி துவங்கியது. இந்த லோன் திருவிழா வரும் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, வங்கியில் அனைத்து விதமான கடன்களும், இலவச ஆலோசனை மற்றும் உடனடி அப்ரூவலும் வழங்கப்படுகிறது. வீட்டுக்கடன், சொத்து அடமானக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன் வழங்கப்படுகிறது.கடன் பெற விரும்புவோர், மூன்று மாத வருமான சான்றிதழ், மூன்று வருட வருமான வரி கட்டியதற்கான சான்றிதழ், ஒரு வருட வங்கி ஸ்டேட்மென்ட் ஆகியவற்றை காண்பிக்க வேண்டும்.இதேபோன்று, டிஜிட்டல் வணிகக்கடன், சுலப வியாபாரக்கடனும் வழங்கப்படுகிறது. தொழில் தேவைக்கு நடப்புக்கடன், குறுகிய கால கடன் வழங்கப்படுகிறது.இதுமட்டுமின்றி, நகைகளின் பேரில், விவசாய நகைக்கடன், தனிநபர் மற்றும் வியாபார நகைக் கடன் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது.மேலும் விபரங்களுக்கு, 9943988047, 9655940002 மற்றும் 04147 -222203 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X