| சர்வதேச கிராமப்புற பெண்கள் தின விழா Dinamalar
சர்வதேச கிராமப்புற பெண்கள் தின விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 அக்
2019
04:49

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கச்சிபெருமாநத்தம் கிராமத்தில், சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.விருத்தாசலம் ஏ.கே., சமூக நல அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, அறங்காவலர் வழக்கறிஞர் அகிலன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க., நிர்வாகிகள் பாலு, அன்பழகன் முன்னிலை வகித்தனர். அதில், சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம், பெண் கல்வி, மத்திய மாநில அரசுகளின் சலுகைகள், இட ஒதுக்கீடு குறித்து பெண்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.பெண்களுக்கு புடவைகள், பிஸ்கட், பழம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் டிலானி, பகுத்தறிவு, அமுதவன், நீலமேகராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X