பகல் கொள்ளையர் இருவர் கைது: இருவழக்கில் 30 பவுன் பறிமுதல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2019
00:41

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட, இருவரை கைது செய்து, 30 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.பொள்ளாச்சி சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில், பூட்டிய வீடுகளில் தொடர் நகை திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன. திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணையை துரிதப்படுத்தினர்.


இந்நிலையில், கோபாலபுரத்தில் சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், கோவை ஒண்டிபுதுார் காமாட்சி நகரை சேர்ந்த மணிகண்டன், 40, ஒண்டிபுதுார் சத்யா நகரை சேர்ந்த சரவணன், 24 என்பதும்; வீட்டின் பூட்டை உடைத்து தொடர் நகை திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.இதனையடுத்து, இருவரையும் கைது செய்து தாலுகா போலீசார் விசாரித்தனர். அதில், ஆச்சிப்பட்டி பழனியப்பா நகர், கூட்டுறவு திருநகரில் பூட்டிய வீடுகளில் நகை திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து, 30 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.போலீசார் கூறியதாவது:கைது செய்யப்பட்ட மணிகண்டன், சரவணன் மீது, கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. செட்டியக்காபாளையத்தில் கடந்தாண்டு குண்டர் சட்டத்தில் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். சில மாதங்களுக்கு பின் வெளியே வந்தவர், மீண்டும் குற்ற சம்பங்களில் ஈடுபட்டுள்ளார்.இவர்கள் இருவரும், பொள்ளாச்சி சரகத்தில் மொத்தம், 14 குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட, ஐந்து வழக்குகளில், ஏழு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 30 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கோர்ட் மூலம் போலீஸ் காவலுக்கு எடுத்து விசாரணை நடத்தி, மற்ற வழக்குகளில் திருடப்பட்ட நகைகளை மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.


திருட்டு பணத்தில் உல்லாசம்!கைது செய்யப்பட்ட இருவரும், பட்டப்பகலில் வீட்டின் வெளியே பூட்டப்பட்டு இருந்தால் உடனடியாக, உள்ளே புகுந்து நகைகளை திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இரவு நேரங்களில் திருடாமல், பகலில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரங்களை பயன்படுத்தி கைவரிசை காட்டியுள்ளனர்.கண்காணிப்பு கேமராவில் சிக்காமல் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். இறுதியாக திருட்டு சம்பவங்கள் நடந்த பகுதிகளில் கேமரா இருந்தது தெரியாமல் சிக்கிக் கொண்டனர். திருடிய நகைகளை விற்று, மது, மாது என, உல்லாசமாக செலவு செய்துள்ளனர்,' என போலீசார் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X