| பெண் தற்கொலை ஏன்: ஆர்.டி.ஓ., விசாரணை Dinamalar
பெண் தற்கொலை ஏன்: ஆர்.டி.ஓ., விசாரணை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2019
01:46

கோவை:திருமணமான ஒரே மாதத்தில், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது.கணபதி, பாரதியார் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன்,27; கூலி தொழிலாளி. மனைவி சத்யவாணி,25; தனியார் நிறுவன ஊழியர். இருவரும் காதலித்து, கடந்த, 29 நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். சில நாட்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.நேற்று முன்தினம் மீண்டும் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. விரக்தி அடைந்த சத்யவாணி, வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சரவணம்பட்டி போலீசார், சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனை அனுப்பினர். திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X