கலெக்டரையும் குப்பை அள்ள வைத்த வருவாய் நிர்வாக ஆணையர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

20 அக்
2019
08:04
பதிவு செய்த நாள்
அக் 20,2019 08:01

நாகப்பட்டினம் : நாகையில், குப்பை அகற்றும் பணியில், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் களமிறங்கியதால், உடனிருந்த கலெக்டர் மற்றும் அதிகாரிகளும் துாய்மை பணியில் ஈடுபட்டனர்.





நாகையில், வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல் தடுப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், இரு தினங்களுக்கு முன் ஆய்வு மேற்கொண்டார்.







நாகை அடுத்த, கீச்சாங்குப்பம் பகுதியில் ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன், ஒரு வீட்டின் வாசலில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில், கொசுக்கள் முட்டையிட்டுள்ளதை பார்த்து, அதை கரண்டியில் எடுத்து, வீட்டின் உரிமையாளரிடம் விளக்கினார்.





இதை தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த, பாழடைந்த கட்டடங்களில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். கடற்கரையோரம், குடியிருப்பு பகுதியில், பரவலாக தேங்கிக் கிடந்த குப்பையை பார்த்து அதிர்ச்சியடைந்தவர், அங்கிருந்த துப்புரவு பணியாளர்களிடம், மண்வெட்டியை வாங்கி, குப்பையை அள்ளத் துவங்கினார்.இதையடுத்து, உடனிருந்த, கலெக்டர் பிரவின் நாயர், அதிகாரிகள் மற்றும் துப்புரவு ஊழியர்கள், துாய்மை பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி மக்களும், சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர்.





கீச்சாங்குப்பத்தில் ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன், பாழடைந்து காணப்பட்ட, சிறிய கட்டடத்திற்குள், புதர் மண்டிக்கிடந்ததை பார்த்து, திடீரென்று உள்ளே புகுந்தார். பின், புதர்களை உடனே அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.வருவாய் நிர்வாக ஆணையரின் அதிரடி ஆய்வுக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. மேலும், துாய்மை பணியில் அக்கறை காட்டுவதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


 

Advertisement
மேலும் நாகப்பட்டினம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (24)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
22-அக்-201909:47:43 IST Report Abuse
oce ராதா கிருஷ்ணன் மனிதருள் ஒரு மாணிக்கம்.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
20-அக்-201918:14:25 IST Report Abuse
J.V. Iyer மனது சுத்தம், உடல் சுத்தம், சுற்றுப்புற சுத்தம் இருந்தால்தான் மகிழ்ச்சி. தெரியாவிட்டால் கற்றுக்கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
20-அக்-201916:46:46 IST Report Abuse
ஒரு நாள் முதலமைச்சர் , அவர் ,தி மு க வரவேண்டும் என சொல்லவில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X