| அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள்: எல்லை பகுதியில் விபத்து அபாயம் Dinamalar
அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள்: எல்லை பகுதியில் விபத்து அபாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2019
21:41

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவில் இருந்து, வீரப்பகவுண்டனுார் செல்லும் ரோடு வழியாக, அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றி கொண்டு, லாரிகள் சென்று வருகின்றன.கிணத்துக்கடவில் இருந்து வீரப்பகவுண்டனுார் வழியாக கேரளா மாநில எல்லை வரை தார்ரோடு போடப்பட்டுள்ளது. இவ்வழியாக லாரி, டெம்போ போன்ற வாகனங்கள், அதிகளவில் சென்று வருகிறது.கேரளாவுக்கு செல்லும் லாரிகள் அளவுக்கு அதிகமாக பாரங்களை ஏற்றி செல்வதால், தார்ரோடு பழுதடையும் வாய்ப்புள்ளது. மேலும், லாரிகள் கட்டுப்பாட்டை இழக்கும்போது, பெரிய விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.இவ்வழியாக செல்லும் லாரிகள், கேரளா எல்லை பகுதியில் போலீஸ் செக்போஸ்ட் உள்ளது. அடிக்கடி அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து, அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.இதனால், லாரிகள் முத்துக்கவுண்டனுார், ரங்கேகவுண்டன்புதுார் வழியாக கேரளா மாநிலத்திற்கு சுற்றி சென்று விடுகின்றன. அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை கட்டுப்படுத்த, கேரளா எல்லை பகுதி ரோட்டில், வெளியே செல்லும் இடத்தில், பாரத்தின் உயரத்தை கட்டுப்படுத்தும் இரும்பு ஆர்ச் வைத்தால் மட்டுமே, அதிகப்படியான பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை கட்டுப்படுத்த முடியும். இதற்கு, கிணத்துக்கடவு போலீசார், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X