உடுமலை:புரட்டாசி மாதம் நிறைவு பெற்றுள்ளதால், இறைச்சிக்கடைகளில், நேற்று கூட்டமும், விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது.உடுமலை சுற்றுப்பகுதியில், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், ஏழுமலையான் உட்பட பெருமாள் கோவில்களுக்கு, விரதமிருப்பது வழக்கம். இம்மாதத்தில், இறைச்சியை தவிர்த்து விடுவார்கள்.புரட்டாசி மாதம் நிறைவு பெற்று, நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், நகர மற்றும் கிராமங்களிலுள்ள இறைச்சிக்கடைகளில், கூட்டம் அதிகமிருந்தது. மட்டன், சிக்கன் மற்றும் மீன் கடைகளில், வரத்தும், விற்பனையும் களை கட்டியது.ஆனால், விலையில், பெரிய மாற்றம் இல்லை. தீபாவளி பண்டிகையின் போது, வரத்து அடிப்படையில், விலையேற்றம் இருக்கலாம் என, வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.