ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்: கணியூர் மக்கள் தவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2019
22:12

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே கணியூரில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ரோட்டின் இரு பக்கமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மடத்துக்குளம் அருகே உள்ள கணியூரில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு முக்கிய பகுதியில் மடத்துக்குளம் - காரத்தொழுவு ரோடு அமைந்துள்ளது.


இந்த ரோட்டின் இரு பக்கமும் கடைகள், வங்கி, மருத்துவமனை, பேக்கரி உள்ளன.தாராபுரம், உடுமலை, பழநி, பொள்ளாச்சி உள்ளிட்ட பல நகரங்களுக்கு, இந்த ரோட்டின் வழியே பஸ் போக்குவரத்து உள்ளது. இது தவிர, கனரக மற்றும் சிறிய வாகனங்கள், டூ - வீலர்களில் தினமும் பல ஆயிரக்கணக்கானோர் செல்கின்றனர். இதனால், இதில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. ஆனால், போக்குவரத்துக்கு தகுந்த அளவில் இந்த ரோடு அகலம் இல்லை. இதோடு, இருபக்கமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன.கடைகளின் தரைதளங்களை ரோட்டின் விளிம்பு வரை அமைக்கின்றனர்.


இதற்கு பின், விளம்பர போர்டுகள் ரோட்டில் வைக்கப்படுகிறது. சில கடைகள் ரோட்டை ஆக்கிரமித்தும் உள்ளன.ஆக்கிரமிப்பு உள்ளதால், வாகனங்கள் விலகிச்செல்ல முடிவதில்லை. விபத்தும் ஏற்படுகிறது. மேற்கூரைகள் ரோடு வரை நீட்டித்துள்ளனர். பழைய சினிமா தியேட்டர் தொடங்கி, புதுார் மடம் வரை நெருக்கடியாக உள்ளது. வாகன ஓட்டுனர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதற்குத்தீர்வாக, ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X