ரயில் சேவையை பயன்படுத்துவோர் அதிகரிப்பு: அடிப்படை வசதி இல்லாத ரயில்வே ஸ்டேஷன்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2019
22:14

உடுமலை:ரயில் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தும், உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தப்படாமல், பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.மதுரை ரயில்வே கோட்டத்துக்குட்பட்டது உடுமலை ரயில்வே ஸ்டேஷன். இதில், பழநியிலிருந்து பொள்ளாச்சி வரை, அகல ரயில் பாதை பணிகள், 2009ல் துவங்கி, 2015ல், நிறைவு பெற்றது.


இந்த ரயில் வழித்தடத்தில், தற்போது, சென்னை-பாலக்காடு செல்லும் விரைவு ரயில், திருச்செந்துார்-பழநி- பொள்ளாச்சி பயணிகள் ரயில், மதுரை-கோவை பயணிகள் ரயில், திருவனந்தபுரம்-மதுரை வரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய ரயில்கள் உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், நின்று செல்கின்றன.சமீபத்தில், கோவை-பொள்ளாச்சி-உடுமலை வழியாக பழநி செல்லும் தற்காலிக பயணிகள் ரயில், நிரந்தரமாக்கப்பட்டது. இதையடுத்து, உடுமலையில், ரயில் சேவை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.ஆனால், கனமழை பெய்யும் போது, பிளாட்பாரத்திலிருந்து சரிவான தடுப்புச்சுவர் வழியாக மழை நீர் முழுவதும், டிக்கெட் கவுன்டர் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர் அறை வரை, வெள்ளமாக செல்கிறது. இதே போல், ரயிலுக்கு காத்திருக்கும் பயணிகளுக்கு, கழிப்பிட வசதி இல்லை. காத்திருப்போர் அறையும் கிடையாது.


முதல் பிளாட்பாரத்தில் மேற்கூரை இல்லாமல், பயணிகள் மழைக்காலத்தில் காத்திருக்க முடிவதில்லை. பிளாட்பாரத்தின் மறுபுறத்தில், சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து அச்சமூட்டும் வகையில் உள்ளது. உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகத்துக்கு, தொடர்ந்து கோரிக்கை மனு அனுப்பப்பட்டு வருகிறது.இருப்பினும், எவ்வித மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படாததால், பயணிகள் அதிருப்தியில் உள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X