.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் பணிகளை துவக்குவதில் தாமதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2019
23:38

ராமநாதபுரம், : ராமநாதபுரம் அருகே ஆற்றாங்கரையில் வைகை ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரம் அடைக்கப்பட்டுள்ளதை அகற்ற 1.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் பணிகளை துவக்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.



ராமநாதபுரம் அருகே ஆற்றாங்கரையில் வைகை ஆறு கடலில் சங்கமிக்கும் முகத்துவாரம் உள்ளது. இங்கு ஆற்றுக்கும்,கடலுக்கும் இணைப்பு இல்லாமல் தென் மேற்கு பருவக் காற்று வீசும் போது மணல் குவிந்து துண்டிக்கப்படுகிறது. இந்த காலத்தில் கடல் சீற்றம் காணப்படும் போது கடல் பகுதியில் படகுகள் நிறுத்த முடியாமல் மீனவர்கள் தவிக்கின்றனர். கடலில் படகுகள் நிறுத்தப்பட்டால், காற்றில் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடையும். கடலுக்குள் படகுகள் இழுத்து செல்லப்படும்.




இதனால் மீனவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து ஆற்றுக்கும், கடலுக்கும் நிரந்தர இணைப்பை ஏற்படுத்த அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். கடலில் இருந்து ஆற்றுப்பகுதிக்குள் படகுகளை நிறுத்தினால் கடல் சீற்றம் இருந்தாலும் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்படும். மீன்களை இறக்குவதும் எளிது.



அழகன்குளம், பனைக்குளம், கும்பரம், இருமேனி, புது வலசை, முடியூர்பட்டினம் மீனவர்கள் இதனால் பயனடைவர்.முகத்துவார மணல் மேட்டை அகற்ற மீனவர்கள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சட்டசபையில் 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடல் முகத்துவாரத்தை நிரந்தரமாக திறந்திருக்க பணிகள் துவக்கப்படும், என அறிவிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் இன்று வரை பணிகள் துவக்கப்படவில்லை. தற்போது வட கிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், கடல் சீற்றம் ஏற்பட்டு அலைகளால் மணல் மேவி மூடியுள்ள பகுதி அரிக்கப்பட்டு இயற்கையில் ஆற்றுக்கும், கடலுக்கும் இணைப்பு ஏற்படும்.



இயற்கையாக ஏற்படும் இந்த இணைப்பு மார்ச் மாதம் வரை நீடிக்கும். அதன் பிறகு கடலுக்கும், ஆற்றுக்கும் இணைப்பு துண்டிக்கப்படும். எனவே, விரைவில் ஆற்றுக்கும், கடலுக்கும் நிரந்தர இணைப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X