மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருப்பு! சம்பா நடவு செய்ய முடியாமல் தவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2019
00:14

கடலுார்: தமிழகத்தில் பருவ மழை துவங்கி தீவிரமடையாததால் தொடர்ந்து வெயில் அடித்து வருகிறது. இந்த ஆண்டில் பெய்யக்கூடிய சராசரி மழையளவு கிடைக்குமா என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் பெய்யும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் கடைசி வாரத்தில் துவங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்தது.இருப்பினும் தென்மேற்கு பருவமழை விரைவில் விடை பெற்றதால், முன்கூட்டியே 16ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியது.


தென்மேற்கு பருவ மழையினால் மாவட்டத்தின் உள் பகுதியில் வேப்பூர், திட்டக்குடி, விருத்தாசலம் போன்ற பகுதிகளில் எதிர்பாராத அளவில் கனமழை பெய்தது.இந்த மழை, ஆற்றில் ஓடிச்சென்று கடலில் கலக்காமல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் இருந்தது. கடலுார், பரங்கிப்பேட்டை போன்ற கடலோர பகுதியில் போதிய மழை கிடைக்கவில்லை. பருவமழை துவங்கியதில் இருந்து பெரிய அளவில் மழை பெய்யாமல் வெயில் அடித்து வருகிறது.


பல இடங்களில் சம்பா நடவு செய்ய முடியாமல் விவசாயிகள், மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.கடலுார் மாவட்டத்தில் 15 ஆண்டின் சராசரி மழையளவு 1,200 மி.மீ., அதில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் 383 மி.மீ., மழைக்கு 481 மி.மீ., பெய்துள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும் சாராசரியாக 697 மி.மீ., மழை பெய்ய வேண்டும். அக்டோபரில் மட்டும் 220 மி.மீ., மழைக்கு, 20ம் தேதி வரை 66.99 மி.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது. இது சராசரியை விட குறைவாகும். பருவ மழை துவங்கியும், வெறும் இடி, மின்னல், துாரலோடு மழை போய்விடுகிறது. பருவகாலத்தில் தான் கடலோர பகுதியில் அதிகளவு மழை பெய்யும். தற்போது இயற்கைக்கு மாறாக கடலோர பகுதியை தவிர்த்து மாவட்டத்தின் உள் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.கடந்த காலங்களில் வங்கக்கடலில் 6, 7 காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி நல்ல மழையை கொடுத்து வந்துள்ளது.


இதுவரை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகாமல் இருப்பதால்தான் மழை பெய்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.தற்போது மேலடுக்கு சுழற்சி காரணமாக நான்கு நாட்களுக்குப்பின் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. சம்பா நடவுக்கு ஏற்றவாறு மழை பெய்யுமா என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X