காத்திருக்கு ஆபத்து
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2019
00:25

நரிக்குடி : அரசுப்பள்ளிகளில் இடியும் நிலையில் உள்ள சமையலறையை பராமரிக்கவோ அல்லது அப்புறப்படுத்தி புதிய சமையலறை கட்டவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.



மாவட்டத்தில், பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் சமையல் அறை கட்டப்பட்டு பல வருடங்கள் ஆன நிலையில், மேற்கூரை இடிந்து, வெயிலிலும், மழையிலும் சமையல் செய்து மாணவர்களுக்கு உணவளிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களில் அச்சத்துடன் சமைக்கும் சமையலர்களுக்கு உயிர் பாதுகாப்பு கிடையாது.



இதில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. மேற்கூரையில் தங்கும் விஷப்பூச்சிகள் உணவில் விழுந்திடுமோ என்ற அச்சம் உள்ளது. மேலும் மழை நேரத்தில் விறகுகள் நனைவதால் எரிப்பதற்கு சிரமப்படுகின்றனர். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் உரிய நேரத்தில் மாணவர்களுக்கு உணவு வழங்க வேண்டும். குறிப்பாக, நரிக்குடி நாலுாரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 105 மாணவர்கள் படிக்கின்றனர். மதிய உணவு வழங்க, பள்ளிக் கட்டடத்தை ஒட்டியே, 15 ஆண்டுகளுக்கு முன் சமையலறை கட்டடம் கட்டப்பட்டது.



காலப்போக்கில் சேதமடைந்ததால் விபத்து அச்சத்தில், அதே பள்ளி வளாகத்தில் உள்ள பழைய பாழடைந்த கட்டடத்தில் சமையல் செய்து வருகின்றனர். ஏற்கனவே பயன்படுத்த முடியாத கட்டடம் என ஒதுக்கப்பட்ட இந்த கட்டடத்தில், சமையல் செய்வது ஆபத்தை ஏற்படுத்தும் என அக்கிராமத்தினர் பயப்படுகின்றனர். இது குறித்து பல முறை ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.



இந்நிலையில், காற்று, மழைக்கு ஓடுகள் விழுந்து கொண்டே இருக்கிறது. மழைநீர் உள்ளே புகுந்து சமையல் செய்வதற்கு இடையூறு ஏற்படுத்துகிறது. விபத்துக்கு முன் இரு கட்டடங்களையும் அப்புறப்படுத்தி, புதிய சமையலறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X