விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு ஏற்பாடுகள் தயார்! அமைதியான முறையில் நடைபெற பலத்த பாதுகாப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2019
00:31

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி ஓட்டுச்சாவடிகளுக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, அனுப்பி வைக்கும் பணிகளை, கலெக்டர் ஆய்வு செய்தார்.


விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று(21ம் தேதி) நடைபெற உள்ளது. இதையொட்டி, நேற்று காலை 10.45 மணி அளவில் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில், விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் ஸ்ட்ராங் ரூமில் தயாராக வைக்கப்பட்டிருந்த ஓட்டுப் பதிவு இயந்திரம், விவிபேட், கன்ட்ரோல் யூனிட், மற்றும் ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான அழியாத மை, உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி நடந்தது.


ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் முன், வாகனங்களுக்கு முறையாக பூஜை செய்து அனுப்பி வைத்தனர்.பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:விக்கிரவாண்டி தொகுதியிலுள்ள 23 மண்டலங்களுக்கு, மண்டல அலுவலர்கள் தலைமையில் ஓட்டுப்பதிவு இயந்திரம், வி.வி.பேட், கன்ட்ரோல் யூனிட் மற்றும் தேவையான ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


தேர்தலுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ள 10 மருத்துவ குழுக்கள் தொகுதி முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதியம் 12 மணிக்கு மேல் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வாக்குச்சாவடி அலுவலர்கள் ,ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் செல்வதற்கு முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.விக்கிரவாண்டி தொகுதியில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர், என்று கலெக்டர் கூறினார்.


கலெக்டர் ஆய்வின் போது, தேர்தல் பார்வையாளர் சினு வீரபத்ரடு, தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், ஆர்.டி.ஓ., ராஜேந்திரன், தாசில்தார்கள் பார்த்திபன்,மனோகரன், நேர்முக உதவியாளர் நாராயணமூர்த்தி, பி.ஆர்.ஓ ரவிச்சந்திரன் மற்றும் 23 மண்டல ஓட்டுச்சாவடி அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X