திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வட்டார அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அப்துல்கலாம் குறித்து நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, திருக்கோவிலூர் வட்டார அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீட்-இந்திய சமூக சேவை நிறுவனத்தின் சார்பில் பேச்சு, கட்டுரைப் போட்டி, அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செட்டித்தாங்கல் எஸ்.எஸ்.கே., திருமண மண்டபத்தில் பரிசளிப்பு விழா நடந்தது.ஆசிரியர் அருணகிரி, சென்னகுனம் தமிழாசிரியர் நாகராஜன், சோழவாண்டியபுரம் அறிவியல் ஆசிரியர் வில்வபதி முன்னிலை வகித்தனர். டாக்டர் விஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அப்துல்கலாம் விருது, ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.