விக்கிரவாண்டி: ஏரியில் துணி துவைக்க சென்ற பள்ளி மாணவர், நீரில் முழ்கி பரிதாபமாக இறந்தார்.விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் தெற்கு பொன்னங்குப்பம் கிராமம் பள்ளத்தெருவை சேர்ந்தவர் சேட்டு, 37 ;இவரது மகன் சந்துரு,11: இவர் அதே ஊரில்உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.பள்ளி விடுமுறை என்பதால் நேற்று மாலை 5 மணியளவில், சந்துரு, தனது நண்பர்களுடன், அதே ஊரில் இருந்த ஏரியில் துணி துவைக்க சென்றுள்ளார்.அப்போது எதிர் பாராதவிதமாக சந்துரு, தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து, விக்கிரவாண்டி போலீசில் வி.ஏ.ஓ., சரத் கொடுத்துள்ள புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.